Posts

Showing posts from February, 2017

கம்பிவடம்

Image
            அ ப்பாவோடு வயலுக்குப் போகிறோம் என்றாலே தனீ உற்சாகம் வந்துவிடும். நாள் முழுக்க சோறுதண்ணியே வேண்டாம். சிவப்பு கைப்பிடி போட்ட பார் சைக்கிளில் முன்னும் பின்னுமாக, தம்பியையும் என்னையும் உட்கார வைத்துக்கொண்டு, சங்கரங்கோயிலில் இருந்து சைக்கிளை மிதித்தால் பூலித்தேவன் அரண்மனை இருக்கும் நெற்கட்டான் செவல் வரைக்கும்கூட சலிக்காமல் அழுத்துவார். அவரோடு சைக்கிளில் போவதே என்னம்மோ ராசா குதிரையில் சவாரி போகிற மாதிரி இருக்கும்.  அப்பாவுக்குச் சொந்தமாக தாத்தா காலத்தைய புஞ்சைகள் தலைவன் கோட்டைக்கு கீழ்த்திசையில் கொஞ்சம்போல மிச்சமிருந்தது. காற்றடி மழையடிக்கும் தப்பின ஆவுடையாறு கோடைக்கு வற்றிப்போனபிறகு, ‘இந்த நிலத்தில கிடந்து நான் பாடுபார்த்தது போச்தும் நீ படிக்கப்போ’ என்றுசொல்லி அப்பாவைப் படிக்க அனுப்பிவிட்டார் தாத்தா. அவரது மறைவுக்குப் பிறகு வயல் என்பது வேலிபோட்ட தோட்டமானது. தரிசு விட்டதுபோக மிச்சத்தை  ஆட்கள் வைத்து   பராமரித்தார் அப்பா. சின்னவயசில் எப்பவாவது பூஞ்சைத் தோட்டத்துக்கு போகும்போது, எங்களையும் இப்படி கூடேக் கூட்டிக்கொண்டு போவார்.   இன்றைக்கும் ஊருக்குள் “நாயனா பூஞ்சை இங்

அவளும் நானும் அலையும் கடலும் | நூல் வெளியீடு நிகழ்வு

Image
                     ஒன்பது சிறுகதைகள் எழுதி முடித்து கைவசம் இருந்தன. ‘ஊருக்குச் செல்லும் வழி’ என்கிற கட்டுரைத்தொகுப்பு வெளியாகி, விற்பனைக்கு வந்து ஒரு மாதம் கூட முடிந்திருக்கவில்லை. அடுத்து எந்தப் பக்கம் கவனத்தைச் செலுத்த என்கிற மனத்தடையோடு நிற்கிறபோது இந்தச் சிறுகதைகளை எல்லாம் ஒரு ரவுண்டு திரும்ப வாசிக்கிற சூழல் அமைந்தது. ஊழ்வினை நம்மைச் சும்மாய் இருக்க விடாதில்லையா...  அத்தனையையும் சீர்பார்த்து, முடிக்கிறபோது  ‘மைதீன் முதலாளி’ என்கிற தேங்காய்ப் பட்டணத்து கருவாட்டு வியாபாரியின் கதையான  “வள்ளம்” தனித்துவமாக மின்னி நின்றது. அதை உட்கார்ந்து ஓர் நாள் இரவு முழுக்க எழுதித் திருத்திவிட்டு, ஜோ டி குரூஸ் சாருக்கு அனுப்பிவைத்தேன்.  "தம்பி. நாற்பது வருடங்களுக்கு முன்னால் தேங்காப்பட்டனம் கடற்கரையில் நின்றபடி பாடு கேட்டது போலிருந்தது. ஆங்கில மாதங்களையே கேட்டுப் பழகிவிட்ட இன்றைய நிலையில் சித்திரைப்பாடு என்ற வார்த்தைப் பிரயோகமே கதைசொல்லி கார்த்தியோடு மனதளவில் நெருக்கமாக்கி விட்டது. சொன்ன சொல்லுக்கு மருவாதியோடு அறம் சார்ந்து வாழ்ந்தவர்கள் அன்று இருந்தார்கள். சிங்களத்தானுக்கு நம்

புக் டைம் | ஆரஞ்சு முட்டாய் கதைகள் | கார்த்திக் புகழேந்தி

Image
இந்தப் புத்தகத்தின் வாழ்த்துரையில் ஜோ டி குரூஸ் “எளிமையான கதைகள், அதுமட்டும் தான் சொல்லத் தோன்றுகிறது” என்று சொல்லியிருப்பார். புத்தகத்தைப் படித்து முடித்ததும் மிகச் சரியாக என் மனசிலும் அதே தான் தோன்றியது. திருநெல்வேலி மண் வாசம் புத்தகமெங்கும் விரவிக் கிடக்கிறது.நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள், நாம் சந்தித்த மனிதர்கள், நம் பால்யங்கள், எல்லாம் புத்தகம் முழுவதிலும் உலவியபடி இருக்கின்றன. சிந்துபூந்துறை, அம்பா சமுத்திரம் போன்ற கதைகள் , துவக்கத்தில் நம் உதட்டில் அரும்பும் புன்னகையைக் கதை முடியும் வரை தக்க வைக்கின்றன. நான் ஏற்கனவே பல இடங்களில் இதே விஷயத்தைப் பேத்தியிருக்கிறேன் என்றாலும் இங்கேயும் அதையே பேத்துகிறேன். கதை என்பது ஒரு அனுபவம், அதில் ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லியோ ஏதேனும் ஒரு திருகலுடனோ தான் முடிக்க வேண்டும் என்றில்லை. இந்தப் புத்தகத்திலுள்ள கதைகளும் அப்படியே தான். இயல்பாய் எளிமையாய் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன படிக்கும் போது, பிரச்னை என்னவெனில் அதே மிகை இயல்புத் தன்மையுடன் நம்மைக் கடந்தும் விடுகின்றன. இயல்பும் எளிமையும் வாய்க்கப் பெற்ற அளவு அழுத்தம் வாய்க்கப் பெறவில

ஆரஞ்சு முட்டாய் - விமர்சனம் | விஷால்ராஜா

Image
இன்று தமிழில் இடைநிலை எழுத்துக்களுக்கு என்று ஒரு தேவை எழுந்துள்ளது. செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம்கூட இல்லாத ஒரு தலைமுறையால் நேரடியாக தீவிர இலக்கியத்திற்குள் நுழைய முடியாது.அவர்களுக்கு ஆரம்பக்கட்ட வாசிப்பு பயிற்சி தேவை. அதை இடைநிலை எழுத்துக்களால் அளிக்க முடியும். முன்பு இந்த வேலையை வெகுஜன பத்திரிக்கைகள் பார்த்துக் கொண்டிருந்தன. தொலைக்காட்சி வந்து பத்திரிக்கை வாசிப்பை விழுங்கிச் சென்ற பிற்பாடு அங்கு ஒரு வெற்றிடம் உருவானது. அது நிரப்பப் படவே இல்லை.  நூலகத்தில் சுபா, சுஜாதா, பாலகுமாரன் என்று வாசிக்கத் தொடங்கிதான் நான் இலக்கிய வாசிப்பிற்கு வந்தேன். இப்போது அப்படி ஒரு தளம் அமைத்து தர ஆட்கள் இல்லை. இணையம் ஒரு வலிமையான ஊடகமாக மாறியிருக்கும் நிலையில் தமிழில் வாசக பரப்பு அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இணையத்தில் முனைப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சராசரிகளுக்கோ இலக்கிய பரிச்சயம் கிடையாது. எனவே அவர்களாலும் பிரயோஜனம் இல்லை. திரைப்படமோ அரசியலோ வாழ்க்கை பதிவோ நகைச்சுவையோ ஒற்றைப்படையான சராசரி சிந்தனைகளையே பார்த்து சலித்துவிட்டது. ஆரஞ்சுமிட்டாய் சிறுகதை தொகுதியை படித்

இன்றைய தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள் | எஸ்.ராமகிருஷ்ணன்

Image
     தமிழ் சிறுகதையின் முகம் மாறிக் கொண்டேயிருக்கிறது. இளந்தலைமுறை படைப்பாளிகள் புதிய களன்களில் புதிய கதைமொழியில் சிறப்பான கதைகளை எழுதிவருகிறார்கள். சிறுகதை எழுவதுதை பெரும் சவாலாகக் கருதுகிறவன் என்ற முறையில் பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் வெளியாகிற சிறுகதைகளைத் தேடிப் படித்து விடுவேன். புதிய எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகளையும் நேரம் ஒதுக்கி வாசித்துவிடுவேன். சிறுகதைகள் தேங்கிவிட்டது, முடிந்துவிட்டது என்பது பொய்யான அபிப்ராயம். சிறுகதையில் புதிய கதைக்கருவை, மொழியை, கதைசொல்லும் முறையைக் கையாளும் பலர் உருவாகி இருக்கிறார்கள். என் வாசிப்பிற்குள் வராத பல சிறுகதைகள், எழுத்தாளர்கள் இருக்ககூடும். என் வாசிப்பில் முக்கியமாகக் கருதும் இளம்தலைமுறையைச் சார்ந்த பத்து சிறுகதையாசிரியர்களை அடையாளப்படுத்த விரும்புகிறேன் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் துரதிருஷ்டம் பிடித்த கப்பலின் கதை என்ற இவரது சிறுகதைத்தொகுப்பை வாசித்தேன். கால்வினோ, போர்ஹே, சரமாகோ எனப் பரந்த வாசிப்பு அனுபவம் கொண்டவர் என்பதன் சான்றாக இவரது கதைகள் பின்நவீனத்துவ எழுத்துமுறையாக இருக்கின்றன. தாவித்தாவி செல்லும் மொழியில்

வாசிப்போம் வாருங்கள் - வற்றாநதி

Image
       சிறுகதை என்பது...சட்டென்று ஜில்லென்று தொட்டு விலகும் காலைப் பனிக்காற்றினைப் போல... அடுத்தென்ன அடுத்தென்ன எனப் பக்கங்களைப் புரட்டும் தொடர் புதினங்களைப் போலன்றி, சட்டென்று தொற்றிக்கொள்ள வைக்கும் பரவசம் அது. வருடக் குறிப்புகளோ, நாட்குறிப்புகளோ தேவைவில்லை. ஏனெனில் பலசமயம் நாம் கடந்து வந்த விசயங்கள் தான் இங்கே கண்முன் விரிகிறது. ’’வற்றா நதி’’ திரு.கார்த்திக் புகழேந்தி அவர்களின் சிறுகதைத் தொகுப்பு, மண் மணக்கும் திருநெல்வேலி வட்டார மொழிநடையில் 22 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஆசிரியரின் முதல் வெளியீடு.... நண்பர்கள், நட்பு, பால்யம், விசேசங்கள், குடும்பப் பின்னணி, கோவில் திருவிழாக்கள், பதின்பருவ ஊர்சுற்றல்கள் எனத் தான் சுற்றியதோடு நம்மையும் உடன் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறார். தாமிரபரணியின் ஜில்லென்ற குளிர்ச்சியும், மனம் முழுதும் அப்பிக் கொண்ட தென்பொதிகைச் சாரலோடு, ஒரு சந்தோச சுற்றுப் பயணம் செய்யாலாம் ‘’வற்றா நதியில்’’. - வாசிப்போம் வாருங்கள் February 12, 2015 ·

வற்றா நதி – ஒரு எதிர் நீச்சல்

Image
                             மொத்தம் இருபத்தியிரண்டு கதைகள். இந்த கதைகளை பற்றி விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு கண்டிப்பாக அருகதையில்லை. ஆனால் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒவ்வொரு கதாப்பாத்திரம் நம்மை ஆட்சி செய்ய ஆரம்பித்து விடுகிறது. அந்த கதாபாத்திரங்கள் முழுமையாய் நம்மை ஆட்கொண்டு மோடி மஸ்தான் வித்தை போல நம்மையே அங்கே வாழ வைத்து விடுகின்றன. பச்சை, பிரிவோம் சிந்திப்போம், கிறிஸ்டி ஒரு டைரி குறிப்பு, ஜெனி- இந்த நான்கு கதைகளும் நம்மை இளம்பிராயத்திற்கு இழுத்து செல்லும். இளமை துடுக்குகளிலும் காதல் பார்வைகளிலும் கார்த்திக் புகழேந்தி என்ற சிறுவன் அத்தனை சில்மிஷம் செய்கிறான். கோபியர் மத்தியில் இருக்கும் ஒரு கண்ணனை நீங்கள் ரசிக்க வேண்டுமா, இல்லை கோபிகைகளை கண்ணார காண வேண்டுமா, இந்த கதைக்குள் கொஞ்சம் மூழ்கி விட்டு வாருங்கள். கரையேறுவது கடினம். அப்பாவும் தென்னை மரங்களும் – நகர வாழ்க்கையில் மூழ்கி போய் விட்ட நாம் இதை படித்து விட்டு ஒரு தடவையாவது மிச்சமிருக்கும் அப்பாவின் வேஷ்டியையாவது முகர்ந்து பார்ப்போம். அவர் கட்டி சென்ற வீடு சிதைக்கப்பட்டிருந்தால் ஒரே ஒரு செங்கலையாவது தொட்டு விட வேண்டுமெ